Advertisment

“ரெசிபி சொன்னா வீட்ல ட்ரை பண்ணுவேன்”- நடிகரிடம் கேட்ட சுரேஷ் ரெய்னா

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

raina

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111-லிருந்து 114 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 319 லிருந்து 326 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய பொழுதைப் போக்க வீட்டில் சமையல் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்முறை விளக்கத்தைத் தெரிவித்தால் நானும் என் வீட்டில் செய்து பார்ப்பேன் என்று கமெண்ட் செய்துள்ளார்.

Suresh Raina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe