surya

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட மற்றவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் தற்போது மாமாவின் மகனும் இறந்துவிட்டார் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பஞ்சாப்பில் எனது மாமா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாமாவும், உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டது கொடூரமானது. இதற்கு காரணமான கொள்ளையர்களை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

Advertisment

தற்போது சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “அன்பான ரெய்னாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் உங்கள் துக்கத்தில் பங்கெடுத்துகொள்கிறோம். இதயமற்ற அந்த குற்றவாளிகள் நீதிக்கு முன் நிற்கவைக்கப்பட வேண்டும். உங்கள் மன வலிமைக்காகவும், அமைதிக்காகவும் என் பிரார்த்தனைகள்” என்று கூறியுள்ளார்.