/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maanaadu_0.jpg)
இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பைநிறைவுசெய்த படக்குழு, வரும் நவம்பர் 25ஆம் தேதி ‘மாநாடு’ படத்தை திரையரங்கில் வெளியிடவுள்ளது.
இதனிடையே,தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக சமீபத்தில், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும்போது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டசான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இதனால், திரையரங்குகளுக்குச் செல்பவர்களுக்கு கரோனாசான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல் முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்??முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ
— sureshkamatchi (@sureshkamatchi) November 22, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)