திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சுரேஷ் காமாட்சி, “ இயக்குனர் திரு பத்து படங்களை எடுத்தவர் போல மிக சிறப்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். த்ரிஷாவின் திரைத்துறை பயணத்தில் இது ஒரு சிறந்த படமாக அவருக்கு அமையும்.
இங்கு நாங்களெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். நட்பின் ரீதியாக இந்த படத்தின் விழாவிற்கு வந்துள்ளோம். ஆனால், இந்த படத்தில் நடித்தவர்கள் ஏன் வரவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. ரஜினி, விஜய் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களே வருகிறார்கள். உங்களுக்கு வருவதற்கு என்ன?
நீங்களெல்லாம் ஒரு பிரபலம் என்றுதானே படத்தில் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கிறோம். இப்படி நீங்கள் சினிமா விளம்பரத்திற்கு வரவில்லை என்றால் செய்தியாளர்கள் எதை கவர் செய்வார்கள். அப்படியென்றால் எதற்கு உங்களுக்கு காசு கொடுத்து நடிக்க வைக்கிறோம், ஆயிரம் புதுமுகங்கள் வருகிறார்கள். அவர்களை நடிக்க வைக்க தெரியாதா? உங்களை எல்லாம் வளர்த்த செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்திப்பில் அப்படி என்ன சிக்கல் இருக்க போகிறது. இனியாவது படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அந்த படத்தின் விழாக்களில் கலந்துக்கொள்ளுங்கள். இது உங்களின் பொறுப்பு. இது என் பணிவாக வேண்டுகோள்” என்றார்.