vdhfhbfb

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று (13/05/2021) பிற்பகல் காலமானார். சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உள்ள வீட்டில் அவரது தந்தை, தாய் வசித்து வந்தார். சமீபத்தில் தந்தை செந்தமிழன் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

"அண்ணனின் அன்னையாய் வாழ்ந்த தந்தையை இழந்துவிட்டோம் மிகுந்த வருத்தமளிக்கிறது. தந்தை தாயின் மீது மிகுந்த அன்பும் நேசமும் மரியாதையுமுள்ளவர் அண்ணன் சீமான். பெயந்துயர நிகழ்வை சந்தித்திருக்கும் அண்ணனுக்கு வார்த்தையால் ஆறுதல் சொல்லி மாளாது. தந்தையின் ஆன்மா செந்தமிழாய் முருக பாதத்தில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.