Skip to main content

''உங்களை இன்னும் எத்தனை கரோனா தின்றாலும் திருந்த மாட்டீங்க'' - ஜோதிகாவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.  தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

gdg

 

''திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரை பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கரோனா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. 

இஸ்லாமிய பெண்ணானவர்,  ஒரு இந்துவை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்-

அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம். 

ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக, காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர். 

ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது? 

உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்? 

அவர் எப்படி ஒரு மதம் சார்ந்து பேசியிருக்கக்கூடும்?? அவரின் அடிப்படை மனிதத்தன்மையில் இருந்து யோசித்துப் பேசியதை நீங்கள் மத அடிப்படையில் எடுத்துக் கொண்டது உங்களின் அடிப்படைத் தவறு. 
 

 nakkheeran app



நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளதால் சிக்கியவர் யாராயிருந்தாலும் அடி என்ற வெறித்தனத்தில் அடித்துள்ளீர்கள். 

அவர் பேசியது உங்கள் மூளைக்கு உறைக்கவில்லையா?  உங்கள் குழந்தைகளுக்காகவும்தான் பேசியிருக்கிறார்... 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!"

என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே பேசியிருக்கிறார்? 

எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத அழுத்தமான தேவையான பேச்சு அது... 

ஆனால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்... இவனுகளெல்லாம் கல்வி கற்று அறிவுக் கண் திறந்துவிட்டால் எங்கே நம் மத வியாபாரம் படுத்துவிடுமோன்னு பயம்!!??

கல்விதான் வருங்காலத் தலைமுறையின் விடியலுக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தை வலிமையானதாக உணர்ந்ததால்தான் திருமதி ஜோதிகா அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த ஆயுதத்தை மொன்னையாக்கியேத் தீருவோம் என்பது உங்கள் போராட்டம் என்றால் கல்வி எங்களின் தலைமுறைக்குத் தேவையான ஆயுதமாக அல்ல... பேராயுதமாகச் செய்வோம் என்பது தமிழர்கள் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும். 

 

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு கொண்டு கொட்டுவதைவிட கல்வியை இலவசமாகத் தர மதம் தாண்டி மனிதர்கள் முன் வரவேண்டும்.

கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் மூடிக்கிடக்கும் இவ்வேளையில்கூட உங்கள் மத அரசியல் எதை நிலை நிறுத்தப் போராடுகிறது...? 

திருமதி. ஜோதிகா அவர்களின் பேச்சை நிதானமாகக் கவனியுங்கள். ஆழ்ந்து யோசியுங்கள். அவர் வேறு ஏதாவது ஒன்றிற்கு அந்தப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நீங்கள் கொதிப்பதில் நியாயம் இருக்குன்னு கூட எடுத்துக்கலாம். 

கல்வி நிலையங்களுக்குத் தாருங்கள்னு கேட்டதைப் போய் இவ்வளவு மோசமான அரசியல் செய்கிறீர்களே? கொஞ்சமாவது நியாயம் இருக்கா இதில்? ? 

நீங்கள் இப்படி வெறுப்பை உமிழ உமிழ, மத வெறியைக் கொட்டக் கொட்ட நாம் சார்ந்திருக்கும் மதத்தின் மீது நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடும் நண்பர்களே...!! 

அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கல்விக்காக செலவு செய்துகொண்டிருப்பவர்கள். 

எத்தனையோ குடும்பங்களுக்குப் படிப்பின் மூலம் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள். 

அவர்கள் செய்வதை வைத்தாவது அவர்கள் மத நோக்கில் பேசியிருக்க மாட்டார்கள் என உணர வேண்டாமா? 

திருமதி. ஜோதிகாவே இந்த சூழ்நிலையில்தான் தன் பிறப்பினை திரும்பிப் பார்த்திருக்கக்கூடும். "ஓ நாம் அங்கிருந்து வந்தவரோ" என்பதாக யோசித்துக் கலங்கியிருக்கக்கூடும். நமது நன்றிகெட்ட தனத்தை எண்ணி வெட்கியிருக்கக் கூடும்..

 

பாரதியின் வாக்கைப் பேசியுள்ளீர்கள் திருமதி ஜோதிகா அவர்களே! 

துணிந்து நில்லுங்கள். தணிந்து மன்னிப்புக் கேட்டு உங்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள். 

நாளைய தலைமுறையின் வாழ்த்துகளுக்காக இன்றைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும்... அசிங்கமான தூற்றல்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

உங்கள் படங்களில் பேசப்படும் பெண்ணியம் இங்கும் தலை நிமிர்ந்து நிற்கட்டும். 

உங்கள் பேச்சினைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ளும்வரைக் காத்திருங்கள். 

சமூக மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. அது படிப்படியாகக் கல்வியை பெற்றுக் கொள்வதில் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை, நான் சார்ந்துள்ள மதமாச்சர்யங்களைத் தாண்டி ஏற்றுக் கொள்கிறேன். 

யாவற்றையும் விட கல்வியே சிறந்தது.  உங்கள் கல்விப் பணி தொடரட்டும்.

அன்புடன் 

சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்'' என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.