Advertisment

"யாராவது ஒருவர் கைநீட்டி அந்தப் பிள்ளையை அவர் தாயோடு வாழவையுங்கள்” - சுரேஷ் காமாட்சி வேதனை!

bdbdzbzbd

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு இன்றுடன் தண்டனைக்காலம் 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "தொடர் ஓட்டம், வரலாற்றில் இல்லா போராட்டம்என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும்.

Advertisment

இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாக வேண்டும் என ஒற்றை இலக்கே காரணம். #31YearsOfInjustice" என கூறியுள்ளார். இதற்குப் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "எத்தனையோ நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்கள். சில தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பும் அளித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்யாத குற்றத்திற்காய் 31 ஆண்டுகள் சிறைவாசம் என்பது ஒரு மனிதனை வதைத்து வாழவிடாமல் செய்துவிட்டும் இன்னும் விடுதலை செய்யாமலிருப்பது என்ன நியாயமோ?

Advertisment

விசாரணை அதிகாரியே வாக்குமூலம் தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது எனக் கூறிய பின்பும் சிறைவாசம் ஏனோ??அண்ணன் #பேரறிவாளனை விடுதலை செய்க. ஒரு தாயின் மடிப்பிச்சைக்கு பிள்ளை வரம் அருளுங்கள்... எத்தனை நெடிய துயர போராட்டத்தை ஆட்சியாளர்களுடன் கனிவுடன் செய்துவருகிறார். சட்டம் அரசைக் கைகாட்ட, அரசு கவர்னரைக் கைகாட்ட... யாரோ ஒருவர் கைநீட்டி அந்தப் பிள்ளையை அவர் தாயோடு வாழவையுங்கள். வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.. விடுதலை செய்யுங்கள். நன்றி #standwitharputhamAmmal" என கூறியுள்ளார்.

perarivaalan suresh kamatchi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe