suresh kamatchi

Advertisment

சிம்பு, கல்யாணிப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில்வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தைதயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிதயாரித்து வருகிறார்.

தொடக்கத்திலிருந்தே பல தடைகளைகடந்துஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், கரோனா அச்சுறுத்தலால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருப்பதால் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்து உள்ளார். அதில், "நான் பொதுவாக மீடியாவை மதிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் இதுபோன்ற பொய்யான செய்தி வருத்தப்பட வைக்கின்றது. இதுபோன்ற அறிக்கையை நானோ, இயக்குனரோவெளியிடவே இல்லை. தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் தயாரிப்பாளர்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடுங்கள் ‘மாநாடு’ ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற வேலையை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.