/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/79_53.jpg)
மலையாளத்தில் மத்திய இணை அமைச்சர் மற்றும் நடிகர் சுரேஷ் கோபி நடித்துள்ள படம் ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவின் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தை பனீந்திர குமார் தயாரித்துள்ளார். கிரீஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் கோர்ட் ரூம் ட்ராமவாக உருவாகிறது.
இந்தப் படம் வருகின்ற 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. படத்திற்கு கேரளா திருவணந்தபுரம் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால் தற்போது சென்சார் போர்டின் முடிவு காரணமாக இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் பிரவின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் தெளிவான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதனிடையே ரிலீஸ் தள்ளிப் போவதற்கு காரனம் சென்சார் போர்டின் தலைமையகமான மும்மை அதிகாரிகள் இப்படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தது தான் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பார்த்த மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள், டைட்டில் ரோலான ஜானகி என்ற பெயர் கடவுள் பெயரான சீதாவின் பெயரோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு இந்த பெயர் வைத்திருப்பது மத உணர்வுகளை புன்படுத்தக்கூடும் என ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜானகி பெயருக்கு பதில் வேறு ஒரு பெயரை மாற்ற படக்குழுவிற்கு அரிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)