"அது ஷாலினியே  இல்ல.." - சுரேஷ் சந்திரா கொடுத்த விளக்கம்

suresh chandra explain shalini ajithkumar twitter account

சமூக வலைத்தளங்களின் மூலம் திரைபிரபலங்கள் தங்களது படம் குறித்த தகல்களைபகிர்ந்தும், ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். இதன் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ளமுடிவதால்பல நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அந்த வகையில்நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில் ஷாலினியாகதான் ட்விட்டரில் இணைந்திருப்பதாக பதிவு ஒன்று இடப்பட்டது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திர விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"Mrs Shalini Ajithkumar என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, ட்விட்டரில் இல்லையென்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR AJITHKUMAR Shalini Ajithkumar suresh chandra
இதையும் படியுங்கள்
Subscribe