பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா படக்குழு...

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஏர் டெக்கான் என்று அழைக்கப்படுகிற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

surya

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முன்னமே நடந்து முடிந்த நிலையில் அபர்னா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்ததாகவும், அவருக்கான ஷூட்டிங் பகுதி நிறைவடைந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் குழு, 'நாங்கள் அப்படி யாரையும் பேசவில்லை' என்று தெரிவித்து மறுப்பு தெரிவித்துள்ளது.

soorarai potru Surya
இதையும் படியுங்கள்
Subscribe