Skip to main content

ரஜினி பட பிரச்சனைக்கு தீர்ப்பு வெளியானது 

Published on 21/02/2018 | Edited on 22/02/2018
latha


தன் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அனிமேஷனில் எடுக்கப்பட்ட இப்படத்திற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்ததனால் அந்நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை பணம் வராததால் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியத்திற்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை லதா ரஜினிகாந்த் இது பற்றி வாய் திறக்காததால் ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்க வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி பட வழக்கு - தயாரிப்பாளருக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

rajini kochadaiyaan movie case

 

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

 

இதையடுத்து முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014ல் ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்த நிலையில் அது பணமின்றி திரும்பியது. பின்பு சென்னை விரைவு நீதிமன்றத்தில் முரளி மனோகர் மீது அபிர்சந்த் நஹாவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர்சந்த் நஹாவருக்கு முரளி மனோகர் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்திருந்தது. 

 

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், முரளிமனோகரின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்கவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


 

Next Story

போயஸ் கார்டன் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த் !

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
soundarya

 

 

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனை சவுந்தர்யா மணக்கவுள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் விசாகணும் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். மேலும் இவர் வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். வரும் 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கவுள்ள இத்திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் திருமண தேதி நெருங்கி வருவதால் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில்...."வரும் 10-ந் தேதி அன்று எங்களது மகள் சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் வரும் பிப்ரவரி 10-ந் தேதி மதியம் 3.10 வரை மாப்பிள்ளை அழைப்பும், 12-ந் தேதி வரவேற்பும் நடைபெற உள்ளதால், இந்த கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.