சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெளியான நாள் முதலிலிருந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும்இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தைபார்த்த, தெலுங்கு திரையுலகசூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, சூரரைபோற்று படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ளட்விட்டர் பதிவில், "சூரரைபோற்று, என்னஒரு உத்வேகமானபடம்!. திறமையான இயக்கத்தோடு, அற்புதமான நடிப்பும்இப்படத்தில் உள்ளது. சூர்யா, உச்சகட்ட பார்மில்இருக்கிறார். மேலும் ஒளிருங்கள் பிரதர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்"எனகூறியுள்ளார்.