Advertisment

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அகில உலக சூப்பர் ஸ்டார்... பொங்கல் 2020 அப்டேட்...

தமிழ்ப்படம் 2 வை தொடர்ந்து சிவா சுமோ என்றொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ்ப்படத்தில் நடித்ததில் இருந்து சிவாவை அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பலரும் அழைப்பார்கள். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தை எஸ்.பி. ஹோசிமின் இயக்குகிறார்.

Advertisment

siva sumo

இவர் ஃபிப்ரவரி 14 மற்றும் ஆயிரம் விளக்கு போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களையும் சிவா எழுதியிருக்கிறார்.

தற்போது இந்த படம் 2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்று இந்த படத்தை தயாரிக்கும் வெல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

பொங்கல் 2020 பண்டிகையில் ரஜினியின் தர்பார் ரிலீஸாக இருப்பதாக அந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் முன்னமே தெரிவித்திருந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rajnikanth siva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe