“தீபாவளிக்குள் வாய்ப்பு” - தமன் உறுதி

super singer update

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்துஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில்கோலோச்சி வருகின்றனர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொள்ளும்இசையமைப்பாளர்கள், பலருக்கு பாட்டு வாய்ப்பளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர்,ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.

ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் எனப் பல திறமையாளர்கள் திரைத்துறையில் பாடகர்களாக வலம் வருகின்றனர். சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள் பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்‌ஷிதா சுரேஷ், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா ஆர்கே திரைத்துறையில் பாடகர்களாக வலம் வருகிறார்கள். மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசைக் கச்சேரி, உள்நாட்டு இசைக் கச்சேரி எனப்பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள்.

தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள்ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணன்பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.

thaman
இதையும் படியுங்கள்
Subscribe