Advertisment

மண்டல வாரியான போட்டியாளர்கள்; சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 அப்டேட்

294

விஜய் டிவியில், மக்களின் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி தற்போது 11வது சீசனில் காலடி வைக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம்,  பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர். 

Advertisment

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது.  முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர்கள் குழுவில் இணைகிறார். இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.

பல மாற்றங்கள், முற்றிலும் மாறிய வடிவம், புதிய ஜட்ஜ், சர்ப்ரைஸ்கள் என இந்த சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 வெறும் பாடல் போட்டி அல்லாமல், மண்டல வாரியான போட்டியாளர்களின் இசை யுத்தமாகவும் பார்க்கப்படுகிறது. 

super singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe