Advertisment

சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி

super singer senior 10 update

Advertisment

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி நடந்து வருகிறது. எளிய பின்னணியிலிருந்து, இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள். இதில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ. பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.

வெயிட்டிங்சுற்றில் பல குரல்களில் பாடிய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும்பலரது கவனத்தைப் பெற்றது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக இருக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த, லின்சியின் தந்தை நிகழ்ச்சிக்கு வந்ததோடு, லின்சியை கட்டியணைத்துப் பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.

super singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe