Advertisment

கானா பாடகருக்கு சினிமா வாய்ப்பு, உறுதியளித்த ஷான் ரோல்டன்

super singer senior 10 update

Advertisment

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள். இதில் மிக எளிய பின்னணியிலிருந்து வந்த கானா பாடகர் மணிகண்டன் எனும் கானா சேட்டு, கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இறப்பு நிகழ்ச்சிகளில் கானா பாடியும், ஓட்டலில் சர்வராகவும் கனவைச் சுமந்து கொண்டு, வாழ்க்கையில் போராடி வரும் கானா சேட்டுவின் கதை, அனைவரையும் உருக வைத்தது. தனக்குப் பிறந்த மகன் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று, இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதாக அவர் கூறியது அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர வைத்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b4824576-ab70-45b2-ac4a-942f4405319e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website_3.jpg" />

கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா சேட்டு, கானா பாடலில் வித்தியாசமாக, பக்திப்பாடல் ஒன்றை அற்புதமாகப் பாடி அனைவரையும் திரும்பி வைத்தார். அவரது பாடலைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும் இணைந்து, கானா சேட்டின் குடும்பத்தை மேடையேற்றி அழகு பார்த்ததுடன், பரிசுகள் தந்து, அவரது மகனுக்கு தீட்சன் எனப் பெயரிட்டது, ஒரு நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் கானா சேட்டு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

super singer
இதையும் படியுங்கள்
Subscribe