super singer participation meets sivakarthikeyan

Advertisment

சூப்பர் சிங்கர்சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 10 வது சீசனில் பலதரப்பட்ட பின்னணியிலிருந்து பல பாடகர்கள் பங்கேற்றுள்ளனர். பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.

ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார், தற்போது இவர் தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். இதன் வீடியோ பதிவு, இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவில், சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தருணத்தை நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.