விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது. 

Advertisment

இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, ‘சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்’ எனும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. சூப்பர் சிங்கரின் பிரபல பாடகர்களும், குக் வித் கோமாளியின் கோமாளி நகைச்சுவை வித்தகர்களும், ஒன்றாக வரும் புரமோ வீடியோக்கள், இப்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்க்கிறது. 

குக்வித் கோமாளியில் செய்ய வேண்டிய டிஷ்சை, பாட்டுப்பாடி அதிலிருந்து போட்டியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும், போட்டியாளர்களோடு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் அடாவடியும் அடங்கிய புரமோ மற்றும் சூப்ப சிங்கர் போட்டியின் ஜட்ஜான இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளை, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி அவரை நெகிழ வைக்கும் புரமோ என, இந்த வீடியோக்கள் அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் மாலை 6.30 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது.