super singer 10 update

Advertisment

சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக துவங்குகிறது. நடுவர்களாக ராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றிகரமான 10 வது சீசன் தற்போது வரும் 16 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக துவங்குகிறது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் வகையில், இந்த முறை பல்வேறு தளங்களில், மாறுபட்ட பின்னணியிலிருந்து திறமையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் அவர்களும் பங்குகொள்ளவுள்ளார்.

Advertisment

சமீபத்திய புரோமோ ராணிப்பேட்டையைச் சேர்ந்த போட்டியாளர் நஸ்‌ரீனை அறிமுகப்படுத்தியது. இந்த இளம் போட்டியாளர் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் விருது வாங்கியுள்ளார்.