Advertisment

விஜய்யின் புதிய படம் - ஜீவா பகிர்ந்த சுவாரசிய தகவல்

super good films 100th project will be starring vijay - jeeva shared a information

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி நடிகர் ஜீவா சமீபத்திய நிகழ்ச்சியில், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ஜீவாவும் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor vijay jiiva
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe