Skip to main content

‘சூப்பர் டீலக்ஸ்’ ப்ரோமோவை எடிட் செய்த பிரபல இயக்குனர்

சூப்பர் டீலக்ஸ் படத்தை தியாகராஜா குமாரராஜா ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியதற்கு பின் எட்டு வருடங்கள் கழித்து இயக்கியுள்ளார். ஆரண்ய காண்டம் படம் திரையில் வெளியானபோது  ரசிகர்கள் வரவேற்கவில்லை. பல வருடங்கள் கழித்துதான் இந்த படத்தை ரசிகர்கள் போற்றினர். இதனை அடுத்துதான் தியாகராஜன் குமாரராஜா விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில் ஆகிய ஸ்டார்களை வைத்து மல்டி ஸ்டாரர் படம் ஒன்றை இயக்குகிறார். அந்த படத்திற்கு சூப்பர் டீலக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 
 

vjs

 

 

பின்னர், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு நான்கு எழுத்தாளர்கள் திரைக்கதை எழுதுகிறார்கள் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூட்ட, பிறகு விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற பல விஷயங்கள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டெ இருந்தது. கடந்த மாதம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் செம வைரலானது. வருகிற 29ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 

இந்நிலையில், நேற்று டிங் டாங் என்ற பெயரில் சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து ஒரு டீஸர் வெளியானது. இது தமிழ் சினிமாவில் வெளியான டீஸர்களிலேயே முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பலரும் இந்த முயற்சியை பார்த்து பாராட்டி வந்தனர். பலர் இந்த டீஸர் எடிட் செய்தவர் பெரிய லெஜண்டாக இருக்க வேண்டும். அவருக்கு ஆஸ்கர் தர வேண்டும் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தை எடிட் செய்த சத்யராஜ்தான் எடிட் செய்திருப்பார் என்று பார்த்தால், அங்குதான் ஒரு ஷாக். பிரேமம், நேரம் உள்ளிட்ட படத்தை இயக்கி, எடிட் செய்த அல்போன்ஸ் புத்திரன்தான் இந்த டிங் டாங் டீஸரையும் எடிட் செய்திருக்கிறார். 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்