Skip to main content

YNOTX என்று புதிய திரைப்பட விநியோக நிறுவனம் உதயம்...!  சூப்பர் டீலக்ஸ் படத்தை வெளியிடுகிறது 

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
ynotx

 

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.பி இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் என்ற திரைப்பட
மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவையை துவங்கியுள்ளனர். இதில் முதல் படமாக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா அக்கினேனி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், தேசிய விருது வென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டிலக்ஸ் படத்தை தனது முதல் விநியோகத் திரைப்படமாக  YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் அறிவித்துள்ளது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் எண்டர்டெயின்மெண்ட் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

 

YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழுவின் அங்கமான தயாரிப்பாளர் சசிகாந்த் இதுகுறித்து கூறுகையில்.... "சூப்பர் டிலக்ஸ் படத்தின் மூலம் YNOTX, திரைப்பட விநியோக உலகத்தில் தடம் பதிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெரும், மேலும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இப்படம் வர்த்தக ரீதியாக உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடையும். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்திறமையும், கதையின் மகத்துவமும் இப்படத்தை மென்மேலும் மெருகடைய செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூப்பர் டீலக்ஸ் இயக்குநருக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

Vijay Sethupathi thanks Super Deluxe Director

 

விஜய் சேதுபதி, பகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரை விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்றது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

 

விஜய் சேதுபதிக்கு முதல் தேசிய விருது வாங்கி கொடுத்த கதாபாத்திரமாக 'ஷில்பா' கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதில் திருநங்கையாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

Vijay Sethupathi thanks Super Deluxe Director

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் (29/03/2022) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதை நினைவுகூரும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

Next Story

தேசிய விருதுடன் இயக்குநரை சந்தித்த விஜய் சேதுபதி!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

vijay sethupathi meet director thiyagarajan kumararaja

 

டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விழாவில், 2019ஆம் ஆண்டு சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மேலும் தனுஷ், பார்த்திபன், டி. இமான், வெற்றி மாறன், நாகா விஷால் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

 

இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். அதில், தேசிய விருது கடிதத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா படிக்கிறார். பின்னர் இயக்குநர் கைகளால் நடிகர் விஜய் சேதுபதிக்கு விருது அணிவிக்கப்படுகிறது. அதனையடுத்து 'எனது படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி' என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார். பின்னர் படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி கூறுகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.