சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

bfbfdsbds

இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகிவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான 'ஷீரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைப் படத்தின் நாயகியான நடிகை சன்னி லியோன் மற்றும் இயக்குநர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதைக்குறிப்பிடும் வகையில், கையில் கிளாப் போர்டு ஒன்றை வைத்துக்கொண்டு, அதில் படப்பிடிப்பு நிறைவு என குறிப்பிட்டு, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்...

"‘ஷீரோ’ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னி லியோன் கடுமையாகப் பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்துள்ளார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சன்னி லியோனின் கடுமையான உழைப்பு குறித்து குறிப்பிடாமல் இருக்க இயலாது. படப்பிடிப்பு நிறைவடைந்தபோது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது'' என்றார்.

மேலும், இப்படம் குறித்து நடிகை சன்னி லியோன் பேசுகையில்..."‘ஷீரோ' போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ‘ஷீரோ’வும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்" என்றார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe