Advertisment

சன்னி லியோன் மீதான மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி

Sunny Leone's fraud case kerala court order

பாலிவுட்டில் பல படங்களில் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன். நடிப்பது மட்டுமில்லாமல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட சன்னி லியோன், இந்நிகழ்ச்சிக்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cf0b4c92-9e3e-43d1-a2c4-291c0a99d44e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_15.jpg" />

Advertisment

ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ஒப்புக்கொண்ட படி நிகழ்ச்சியில்பங்கேற்கவில்லை என்றும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் கேரள மாநிலக் குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சன்னி லியோன் தனக்கு எதிராக தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரிகேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எந்த குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. இந்த வழக்கால் நாங்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி2 வாரங்களுக்கு சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என விசாரணைக்கு தடை விதித்தார். மேலும் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe