Skip to main content

சர்வதேச அரங்கில் அங்கீகாரம் - கண்கலங்கி நன்றி சொன்ன சன்னி லியோன்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

sunny leone thanks for standing ovation in cannes 2023

 

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர்  உள்ளிட்டோர் வித்தியாசமான மாடர்ன் உடையில் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி, சட்டையிலும் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட குஷ்பு பட்டு புடைவையிலும் கலந்து கொண்டார். 

 

மே 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவில் திரையிடப்பட்டது. இதற்காக அனுராக் காஷ்யப், மற்றும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் சிலர்  பிரான்ஸ் சென்று கலந்து கொண்டனர். இப்படம் திரையிடப்பட்ட நிலையில் அரங்கில் இருந்த அனைவரும் படம் முடிந்தவுடன் கிட்டத்தட்ட 7 நிமிடத்துக்கு எழுந்து நின்று கைதட்டினர். இதை பார்த்த சன்னி லியோன் நெகிழ்ச்சியில் பாராட்டிய அனைவருக்கும் கண்கலங்கி நன்றி தெரிவித்தார். மேலும் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட படக்குழுவினரும் கண்கலங்கி விட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முதல் இந்திய ஒளிப்பதிவாளர்’ - சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த பெருமை

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Santosh Sivan Becomes The First Indian Cinematographer To Receive cannes film festival Pierre Angénieux Tribute

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை புகழ்பெற்ற பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டீக்கின்ஸ் உள்ளிட்ட 10 பேர் வாங்கியுள்ள நிலையில், இவ்விருதினைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெறவுள்ளார். 

1986 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறை மூலம் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி எனப் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து தமிழில் அதிக படம் பணியாற்றியுள்ளார். இதுவரையில் 12 தேசிய விருது வாங்கிய அவர், இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.