Skip to main content

வெளியானது சன்னி லியோன் போஸ்டர்... தெறிக்கும் இன்டர்நெட்  

Published on 19/05/2018 | Edited on 21/05/2018
irumbu thirai.jpeg

 


முன்பு பார்ன் நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் பின்னர் அதை விட்டுவிட்டு ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார். இதனால் இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. இதைத்தொடர்ந்து தமிழ் படமான 'வடகறி' படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு போனார். இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுக்கார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

சார்ந்த செய்திகள்