/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_37.jpg)
வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் ஸ்டைலிஷ் தலைவி என சன்னி லியோனை படக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் டீசரை பார்க்கையில் மாயசேனா என்ற ராணி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளது போலவும் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகியுள்ளது போலவும் தெரிகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)