sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன்தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தளபக்கத்திலும்பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.