நடிகை சன்னி லியோன் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் பார்ன் நடிகையாக தொடங்கினாலும், அந்த துறையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு மூலைமுடுக்கெங்கும் ரசிகர்கள் உண்டு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இவர் தமிழ் சினிமாவில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தற்போது வி.சி. வடிவுடையான் படமான வீரமாதேவிபடத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்க கூடாது என்று பலர் போராட்டங்களும் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த படத்தில் நடித்து வருகிறார் சன்னி.
இந்நிலையில் வடிவுடையான் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது என்றும். இந்த படத்திற்கு டெல்லி என பெயர் வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த பெண் அரசியல்வாதியாக சன்னி லியோனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.