Advertisment

ஆன்லைனில் ஏமாற்றப்பட்ட நடிகை சன்னி லியோன்!

sunny leone pan card misused

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், நடுத்தர குடும்பத்தினர் பாரபட்சமின்றிபலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோன்ஆன்லைன்மோசடிக்குஆளாகியுள்ளார். இவரின்பான் கார்ட் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் பிரபல நிறுவனத்திடம்ரூ.2000 கடன் பெற்றுள்ளார். இத்தகவலை தனது சமூக வலைதள பதிவின்மூலம் பகிர்ந்துள்ள சன்னி லியோன், ”சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ. 2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனதுசிபில்ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது” என்றுகூறியுள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த உதவியும் ஏன் வழங்கப்படவில்லைஎனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்துரசிகர்கள் பலரும் இந்த ட்வீட்டை வைரல் செய்தநிலையில், சன்னி லியோன் அந்த பதிவைநீக்கியதோடு, இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும்தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் , இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்ததற்கும், இனி நடக்காது என உறுதி அளித்ததற்கும்சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

online scams Bollywood sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe