/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/80_9.jpg)
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து 'ஷீரோ' என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துவருகிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிவருகிறது.
இந்த நிலையில், சன்னி லியோன் நடிக்கும் மற்றொரு தமிழ்ப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ஓ.எம்.ஜி (ஓ மை கோஸ்ட்) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தை யுவன் இயக்க, வீரசக்தி தயாரிக்கிறார். நடிகர் யோகி பாபு, சதீஸ், குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)