sunny leone new condition to film crew

பாலிவுட்டில் பல படங்களில் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன். தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில்பல்வேறு காரணங்களால் இப்படம் முடக்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்நிலையில் சன்னிலியோன், படப்பிடிப்பு தளத்தில் தான் கவர்ச்சியாக நடனமாடும் போது குழந்தைகள் இருக்கக்கூடாது என்று நிபந்தனை வித்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்"நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். தான் கவர்ச்சியாக நடனமாடும் காட்சிகள் படமாக்கப்படும் போது, அந்த படப்பிடிப்பு தளத்தின் சுற்றுப் பகுதியில் குழந்தைகள் இருக்கக்கூடாது என படக்குழுவிடம் கண்டிப்பாக கூறியுள்ளேன். அதைமீறி குழந்தைகள் இருந்தால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன்" என பேசியுள்ளார்.