style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஹிந்தி கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் 'வீரமாதேவி' சரித்திர படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டதை அடுத்து 'வீரமாதேவி' படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நடிகை சன்னிலியோன் அடுத்ததாக விஷாலின் 'அயோக்கியா' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார்.