படப்பிடிப்பில் காயம்; வீடியோவை பகிர்ந்த சன்னி லியோன்

Sunny Leone Injured in shooting

பாலிவுட்டில் பல படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ்பெற்ற நடிகையான சன்னி லியோன், தமிழில் ஜெய்யின் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் முடங்கியது.

இதனைத்தொடர்ந்து ஆர்.யுவன் இயக்கத்தில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது இந்தி, தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது படங்களின் குறித்த அப்டேட்டைதனது சமுகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வரும் சன்னி லியோன், படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதைவீடியோவாக பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சன்னி லியோன் கால் விரலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். அப்போது ஒருவர் ஊசி போடலாம் எனக் கூற "என்ன ஊசி... அதெல்லாம்வேணாம்" எனப் பதறியபடி சொல்கிறார் சன்னி லியோன்.

sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe