Skip to main content

படப்பிடிப்பில் காயம்; வீடியோவை பகிர்ந்த சன்னி லியோன்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Sunny Leone Injured in shooting

 

பாலிவுட்டில் பல படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ்பெற்ற நடிகையான சன்னி லியோன், தமிழில் ஜெய்யின் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் முடங்கியது. 

 

இதனைத் தொடர்ந்து ஆர்.யுவன் இயக்கத்தில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது இந்தி, தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது படங்களின் குறித்த அப்டேட்டை தனது சமுக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வரும் சன்னி லியோன், படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.  

 

அந்த வீடியோவில், சன்னி லியோன் கால் விரலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். அப்போது ஒருவர் ஊசி போடலாம் எனக் கூற "என்ன ஊசி... அதெல்லாம் வேணாம்" எனப் பதறியபடி சொல்கிறார் சன்னி லியோன். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் நிகழ்ச்சி 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான  ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.