Sunny Leone help to Turkey earthquake victims

Advertisment

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம்.

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்குகை கொடுங்கள்.நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.