Skip to main content

ஜி.பி.முத்துக்கு பால்கோவா ஊட்டிவிட்ட சன்னி லியோன்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

Sunny Leone has fed Balkova to GB Pearl!

 

வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் முதன்மைக் கதாபாத்திரத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடித்துள்ளார். ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். 

 

'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (02/11/2022) மாலை 05.30 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சன்னி லியோன் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். 

 

விழாவில், மேடைக்கு கீழே இருந்த ஜி.பி.முத்து, மைக் பிடித்து சன்னி லியோன் அக்காகிட்ட நான் சொல்லுற விஷயம் சொல்லிடுவீங்களா? என்று கேட்க, விழா தொகுப்பாளர் மேடைக்கு வருமாறு ஜி.பி.முத்துவை அழைத்தார். 

 

இதையடுத்து, மேடைக்குச் சென்ற ஜி.பி.முத்து, மேடையில் நின்று கொண்டிருந்த நடிகை சன்னி லியோனைப் பார்த்து, “சன்னி லியோன் அக்கா உங்கள பாக்க எனக்கு சந்தோஷமா இருக்கு. உங்க போட்டோவப் பாத்து ஒரு ஸ்வீட் கொடுத்தேன். அது என்னனா பால்கோவா. தமிழ்நாட்டுல பால்கோவா பெரிய விசயம். அத உங்களுக்கு தான் கொடுத்துருக்கேன். நீங்க பால்கோவா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க” என்றார். 

 

பின்னர், நடிகை சன்னி லியோனுக்கு ஜி.பி.முத்து பால்கோவா ஊட்டிவிட்டார். அதைத் தொடர்ந்து, ஜி.பி.முத்துவுக்கு சன்னி லியோன் பால்கோவா ஊட்டிவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்