Advertisment

நவரச நாயகன் கார்த்திக் படத்தில் சன்னி லியோன்

sunny leone to dance one song for tamil movie karthik movie

Advertisment

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் முடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் பாட்டிற்கு நடனமாடவுள்ளார். மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி தயாரிபில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் 'தீ இவன்' படத்தில் நடனமாடவுள்ளார். இப்படத்தில் சுகன்யா, ராதாரவி, சுமன்.ஜெ, சிங்கம்புலி, ஜான் விஜய் நடிக்கின்றனர். டி.எம். ஜெயமுருகன் இயக்கும் இப்படத்தில் ஏ.ஜே.அலி மிர்சா பின்னணி இசை அமைக்கிறார்.

Advertisment

இது குறித்து இயக்குநர் டி.எம். ஜெயமுருகன் கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும், குடும்ப உறவுகளையும் சொல்லும் கதை கொண்ட இந்தப் படத்தில், ‘மேலே ஆகாயம், கீழே பாதாளம், நடுவில் ஆனந்தம், கொண்டாடு தோழி’ என்ற பாடல் காட்சியில் ஆட வேண்டும் என்று, மும்பை வீட்டில் சன்னி லியோனை சந்தித்து கேட்டேன். படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகுதான் ஆட அவர் சம்மதித்தார். இப்பாடல் காட்சி வரும் நவம்பர் 15ம் தேதி சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்படுகிறது’ என்றார்.

actor karthik sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe