/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_62.jpg)
பாலிவுட்படங்களில் பலபாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன். தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் முதற்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இப்படம் முடங்கியது.
இதனைத் தொடர்ந்து வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் முதன்மைக் கதாபாத்திரத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோன் சென்னை வந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)