Advertisment

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன்

Sunny Leone celebrated her birthday with her family

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இப்போது, 'கோகா கோலா', 'ஹெலன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது 42வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சன்னி லியோன். இதனை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் பிறந்தநாளை அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சன்னி லியோன் 1 குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.

sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe