Advertisment

இரட்டை குழந்தைகளுக்கு தாயான சன்னி லியோன்

sunny

தனது கவர்ச்சியான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சன்னி லியோன் சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்து வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு வெளிவந்த லைலா மை லைலா பாடல் வரை அவருக்கென்று பாலிவுட்டில் தனி இடத்தை உருவாக்கி பலரது தூக்கத்தை கெடுத்து தன்நிகரில்லாத கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், டேனியல் வெப்பர் தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்காததால் கடந்த ஆண்டு இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இருந்தும் மரபியல் வழியாக தங்களுக்கென்று வாரிசு இல்லையே என்ற ஏக்கம் சன்னி லியோனின் மனதில் குடிகொண்டிருந்த நிலையில் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் சன்னி லியோனின் கரு முட்டையும், டேனியல் வெப்பரின் விந்தணுவும் மருத்துவ ரீதியாக செயற்கை முறையில் செறிவூட்டப்பட்டு வாடகைத்தாயின் மூலமாக பிரசவம் நடந்தது. இதில் ஒரு குழந்தைக்கு ஏங்கிய சன்னி லியோன் தம்பதியருக்கு ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளை அந்த வாடகை தாய் பெற்றெடுத்து தந்தார். மேலும் அவை இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால் சன்னி லியோன் தம்பதியர் இரட்டை பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகைகளுக்கு ஆஷெர் சிங் வெப்பர் மற்றும் நோவா சிங் வெப்பர் என்று பெயர் சூட்டியுள்ளார்.

Advertisment
sunnyleone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe