Advertisment

ராங் கால் வந்ததற்கு சாரி கேட்ட சன்னி லியோன்...

அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அர்ஜூன் பாட்டியாலா திரைப்படத்தில் வரும் சன்னி லியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sunny leone

டெல்லியை சேர்ந்த வாலிபர் புனித் அகர்வாலுக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த காலில் பேசிய ஒருவர் நீங்கள் சன்னி லியோனா? நான் சன்னி லியோனிடம் பேச வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் ராங் நம்பர் என சொல்லி போனை கட் செய்துள்ளார். போனை கட் செய்த அடுத்த நிமிடம் வேறு ஒரு எண்ணில் இருந்து மீண்டும் சன்னி லியோனை கேட்டு அடுத்த போன் வந்தது அதையும் கேட்டு ராங் நம்பர் என சொல்லி கட் செய்து விட்டார். அதன்பின் தெடார்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

Advertisment

ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி கால் செய்த ஒருவரிடமே இது சன்னி லியான் நம்பர் என யார் உங்களுக்கு சொன்னது? என கேட்டார். அதற்கு அவர் தான் இன்று தான்ன் அர்ஜூன் பாட்டியாலா என்ற திரைப்படத்திற்கு சென்றிருந்ததாகவும், அந்த திரைப்படத்தில் சன்னி லியோன் கேமியோ ரோலில் நடித்திருந்ததாகவும். சன்னி லியோன் நடித்த காட்சியில் அவர் படத்தின் கதாநாயகன் தில் ஜித்திடம் ஒரு போன் நம்பரை கொடுத்ததாகவும் அந்த போன் நம்பர் சன்னி லியோனின் உண்மையான நம்பர் என நினைத்து கால் செய்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து புனித் அகர்வால் போலீசில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “சாரி. உங்களுக்கு நடக்க வேண்டும் என நினைத்து நான் இதை செய்யவில்லை. யாரோ இண்ட்ரஸ்டிங்கானவர்கள்தான் இப்படி உங்களுக்கு கால் செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து புனித் போலீஸிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவார் என்று எண்ணப்படுகிறது.

sunny leone
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe