கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில்தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய அவர், "தக்காளியின் விலை பயங்கரமாக அதிகரித்துள்ளதால், அதன் பாதிப்பு எங்கள் வீட்டிலும் எதிரொலித்துள்ளது. அதனாலேயே நான் சமீப காலமாக தக்காளி சாப்பிடுவதை குறைத்துக்கொண்டேன். இது போன்ற பிரச்சனைகள் என்னை போன்ற பிரபலங்களைபாதிக்காது என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் எதிர்கொள்கிறோம்" என்றார்.