Advertisment

விஜய் சேதுபதியை மிரட்டிய நடிகர் வைபவ்வின் அண்ணன்!

sunil

Advertisment

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரித்து, விஜய்சேதுபதி 80 வயது முதியவராக நடிக்கும் படம் 'சீதக்காதி'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கொண்ட இந்த படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் மிரட்டலாக நடித்திருக்கிறார். மேலும் இதுகுறித்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் பேசும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார். குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும்' என்றார்.

seethakathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe