Sundhara Travels

Advertisment

அசோகன் இயக்கத்தில் முரளி, ராதா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. 'ஈ பறக்கும் தளிகா' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை தங்கராஜ் தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தயாரிப்பாளர் தங்கராஜே இரண்டாம் பாகத்தைத் தயாரித்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முரளி மற்றும் வடிவேலு நடித்த கதாபாத்திரங்களில் கருணாகரன் மற்றும் யோகி பாபுவை நடிக்க வைக்கும் திட்டத்தில் படக்குழு உள்ளதாம். தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டு, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.