Sunder.C, Jai  film crew who released the release date of the movie

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் ஜெய். இவர் 'குற்றம் குற்றமே' படத்தை தொடர்ந்து 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்துள்ளார். புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகை ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'அவ்னி டெலி மீடியா' சார்பாக குஷ்பூ தயாரிக்கும் இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். நவநீத் சுந்தர் என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'பட்டாம்பூச்சி' படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்பட்டது, பின்பு கடந்த மே 13-ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இப்படம் வருகிற ஜூன் மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment