/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/244_11.jpg)
லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ளபுதிய படம்'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது படக்குழு. இதில் நடிகை ரெஜினா, சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும்கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், "என்னுடைய படத்தில் இந்த படத்திற்கு தான் ரிலீசுக்கு முன்பு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது.மொழி தாண்டிஇந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகிவழங்கியுள்ளார்.கௌதம்மேனனுடன்'வாரணம் ஆயிரம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.விஜய் சேதுபதி பிஸியான நேரத்தில் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. என்னுடைய மிகப்பெரியபெருமை லோகேஷ் கனகராஜ். அதே போல்யுனிவர்ஸ் கொடுத்த பெரிய கிஃப்ட் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.
இசையமைப்பாளர் சாம் சி. எஸ் பேசுகையில், "ரஞ்சித், லோகேஷ்போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும் போது எனக்குசுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது.நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)