Advertisment

தனுஷுடன் நடிக்கும் சந்தீப் கிஷான்; உறுதி செய்த படக்குழு 

Sundeep Kishan act with dhanush caption miller movie

Advertisment

செல்வராகவன்இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர்வெங்கிஅட்லூரிஇயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தாமேனன்நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திக்கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். 'சத்யா ஜோதிஃபிலிம்ஸ்'சார்பாகதியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர்மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்தின் சந்தீப் கிஷானின்கதாபாத்திரம் தனுஷுக்கு இணையானவலுவான கதாபாத்திரமாகஇருக்கும் என கூறப்படுகிறது. இவர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த மாநகரம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில தமிழ் படங்களில், தெலுங்கு படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

actor dhanush Captain Miller
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe